இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குட்டி கதை

ஒர் பிச்சைக்காரன் தினமும் ஒரு ஆலயத்தின் வாசலில் பிச்சை எடுத்து உணவு அருந்திவந்தான். அப்போது அந்த ஆலயத்தில் ஒரு மகான் வந்தார். அவரை பார்த்த பிச்சைக்காரன் சாமி என் வாழ்க்கை கடைசிவரை இப்படிதான் இருக்குமா என்று கேட்டான். அதற்கு சாமியார் அது உன் தலையில் எழுதிய விதி. உன் கடைசி வாழ்நாள் வரை இப்படிதான் இருக்கும் என்றார். பிச்சைக்காரன், சாமி என் தலைவிதி மாறாதா, மாற நான் என்ன செய்யவேண்டும் என்றான். அதற்கு சாமியார் நீ சிவபெருமானை பார்த்தால் உன் தலை எழுத்து மாற வாய்ப்பு உள்ளது. அவரை போய் பார் என்றார். பிச்சைக்காரன் சிவபெருமான்  பார்க்க புறப்பட்டான். வெகுநேரம் ஆகியதால் இரவு ஒய்வு எடுக்க ஒர் செல்வந்தர் வீட்டின் கதவை தட்டி, ஐயா இன்று இரவு இங்கே தங்கி ஒய்வு எடுக்க அனுமதிக்குமாறு கேட்க, செல்வந்தர் நீ எங்கு செல்கிறாய். என்று கேட்க. அதற்கு பிச்சைக்காரன் நடந்ததை சொல்ல. செல்வந்தரும் அவர் மனைவியும் எங்களுக்கு ஒர் உதவி செய்யவேண்டும் என்று கேட்க. பிச்சைக்காரன் என்ன உதவி வேண்டும் என்று கேட்க. அதற்கு செல்வந்தரும் அவர் மனைவியும் எங்களுக்கு ஒர் பெண் உள்ளது. அவள் பிறவிஊமை அவள் எப்போது பேசுவாள் என்று சிவபெருமான...

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான்.  அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான். நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள். இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்?  எவ்வளவு இழிசொல்? போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே? என்று தன் விதியை நொந்துகொண்டான். மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல 'அப்பனே ஆண்டவா...என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்' என்று கோபு...

வெண்டைக்காய் மருத்துவ குணம்

தினமும் இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை சுத்தம் செய்து முனையையும் , அடிப்பகுதியையும் வெட்டி எடுத்துவிட்டு துண்டு துண்டாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்திருந்து . ! மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை மட்டும் எடுத்து குடித்து வந்தால் ஒரு சில மாதங்களில் ரத்த புற்றுநோய் , சர்க்கரை நோய் , உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வீங்குதல் மற்றும் கால் வலி போன்ற இன்னும் பல பிரட்சினைகள் இருந்த இடம் இல்லாமல் போகும் என ஆயுள் வேத வைத்தியர்கள் கூறுகின்றனர் . 

தாய்மையின் சிறப்பு

இரவு 12 மணிக்கு சாலையில் ஓர் வாடகை கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அந்த காரை கையசைத்து நிறுத்தினார். "தம்பி ஆஸ்பத்திரி போகணும்" "நான் வரமுடியாது. சாப்பிட்டுட்டு, படுக்கப் போறேன்". "என் மகளுக்கு பிரசவவலி வந்து விட்டது, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா" என்றார் அப்பெண்மணி. "நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்" என்றான் அந்த கார் ஓட்டும் இளைஞன். அப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பதுபோல் வேகவேகமாக தலையாட்டி சம்மதிக்க, கார் அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது. கார் ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது. அக்கர்ப்பிணியின் முனகல் சற்று அலறலாக மாறியது. இரண்டு ரெயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது. இப்போது கார் இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது. நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது அப்பிரசவத் தாயின் அலறல். மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண...

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 11பேருக்கு கொரானா

ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில்  புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அலுவலகம் மூடப்பட்டதால் மாவட்டம் முழுவதும் தபால் சேவை முடங்கியது.😷😷  இந்த அலுவலகத்தில்  ஊழியருக்கு கடந்த 2-ந் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதனால் தபால் அலுவலகம் மூடப்பட்டது. மேலும், 3-ந் தேதி தபால் அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் தபால் ஊழியர்கள் உள்பட மொத்தம் 212 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவு நேற்று வெளியானது. இதில் கணவன்-மனைவி உள்பட 4 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 3 பேர் தபால் பிரிக்கும் பிரிவில் பணியாற்றி உள்ளனர். மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் தலைமை தபால் அலுவலகம் வருகிற 16-ந் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து தபால் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ஈரோடு மாவட்டம் முழுவதும் இருந்து பெறப்படும் தபால்களும், வேறு மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு வரும் தபால்களும் மொத்தமாக ஈரோடு தலைமை தபால் அலுவலகத்துக்கு கொண்டு வரப்படுகிற...

சென்னிமலை முருகன் கோயில்

படம்
07-07-14...ஆறு ஆண்டுகளுக்கு முன் , ஜூலை 7ஆம் தேதி  2014 அன்று நம் சென்னிமலை மலைக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா – (கும்பாபிசேகம்) வெகு விமரிசையாக - மிகச் சிறப்பாக நடைபெற்றது. * திருக்குட நன்னீராட்டுக்கு உரிய யாகசாலைகள் மிகச் சிறப்பாக அமைக்கப் பட்டிருந்தன. சிவாச்சாரியார்கள் பெருந்திரளாக வந்திருந்து மூலவர் உள்ளிட்ட அனைத்து சந்நிதி மூலவர்களுக்கும் சிறப்பு அலங்காரங்கள், யாகசாலை பூசைகள் ஆராதனைகள் நடாத்தினர். திருப்பணி செவ்வனே நடைபெற்ற இராஜ ராஜகோபுரம், மூலவர் சந்நிதி கோபுரம் மற்றும் பல சன்னதி கோபுரங்கள் -கலசங்களுக்கு, மங்கல மேளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க, ஒரே சமயத்தில் அபிசேகமும் புனித நீர் சொரிதல் வைபவங்களும் நடைபெற்றன.   * ஹெலிகாப்டர் மூலம் கோயில், கோயில் கோபுரம் மற்றும் கலசங்கள் மீது பூமழை பொழிந்ததும், எதிர்பாராவிதமாக, அதே சமயம் தன்னிச்சையாக கோயிலின் மீது  கருடன் பறந்து தரிசனம் தந்ததும் குறிப்பிடத்தக்க பல சிறப்பம்சங்களில் சில.     * சென்னிமலையின் மலைக்கோயில், வளாகம், கோயில் தளங்கள்  முழுவதும் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்...

ஒம்முருகா

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது! கந்தகிரி கோவில் வந்தால் நன்மையெல்லாம் நடக்குது! நித்தமும் பாலிலே நீராட்டுவோம் பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்! திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில் திகழும் குங்குமத்தை அன்னையென்போம்! சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது! கந்தகிரி கோவில் வந்தால் நன்மையெல்லாம் நடக்குது! பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்! பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்! திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்! விரலுக்கு மோதிரம் பவளத்திலே! கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே! தங்கத் திருப்பாதம் வணங்கும்போது பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது! சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது கந்தகிரி கோவில் வந்தால் நன்மையெல்லாம் நடக்குது! மயில்மீது மன்னனை இருக்கவைத்து ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்! சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது கந்தகிரி கோவில் வந்தால் நன்மையெல்லாம் நடக்குது! முருகா போற்றி கந்தா போற்றி