பிஎஸ்என்எல் புதிய முயற்சி : இனி ஒவ்வொரு வீட்டிற்கும் இன்டர்நெட் எளிதாக பெறலாம் !
பிஎஸ்என்எல் புதிய முயற்சி : இனி ஒவ்வொரு வீட்டிற்கும் இன்டர்நெட் எளிதாக பெறலாம் ! பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் புதிதாக புக் மை ஃபைபர் ( BookMyFiber ) என்ற போர்ட்டல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இனி எளிதாக இணைய இணைப்பு பெற முடியும் . ஜியோவுக்குப் போட்டியாக ஏர்டெல் , வோடஃபோன் போன்ற தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள் இருந்தாலும் , அதற்கு இணையாக மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனமும் வாடிக்கையார்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகள் , பிளான்களை அறிமுகம் செய்து வருகிறது . அந்தவகையில் பி.எஸ்.என்.எல் நாட்டின் ஒவ்வொருவீடு , இடம் மற்றும் கிராமத்திற்கும் இணையத்தை வழங்குவதற்காக ஒரு புதிய போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது , இதன் மூலம் தற்போது நகரத்திலிருந்து பல மைல் தொலைவில் உள்ள உங்கள் கிராமத்தில் இணையத்தைப் பெறலாம் . பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் BookMyFiber என்ற பெயரில் போர்ட்டல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இந்த சேவை பயனர்களை அதன் பாரத் ஃபைபர் சேவைகளின் கீழ் புதிய இணைய இணைப்புகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது . இதில் உலக வரைபடம் காட்டப்படும் . அதில் நமது இருப்பிடத்தை ஜூம் செய்து குறிப்பிட்ட...