சென்னிமலை முருகன் கோயில்

07-07-14...ஆறு ஆண்டுகளுக்கு முன்


, ஜூலை 7ஆம் தேதி  2014 அன்று நம் சென்னிமலை மலைக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா – (கும்பாபிசேகம்) வெகு விமரிசையாக - மிகச் சிறப்பாக நடைபெற்றது.

* திருக்குட நன்னீராட்டுக்கு உரிய யாகசாலைகள் மிகச் சிறப்பாக அமைக்கப் பட்டிருந்தன. சிவாச்சாரியார்கள் பெருந்திரளாக வந்திருந்து மூலவர் உள்ளிட்ட அனைத்து சந்நிதி மூலவர்களுக்கும் சிறப்பு அலங்காரங்கள், யாகசாலை பூசைகள் ஆராதனைகள் நடாத்தினர். திருப்பணி செவ்வனே நடைபெற்ற இராஜ ராஜகோபுரம், மூலவர் சந்நிதி கோபுரம் மற்றும் பல சன்னதி கோபுரங்கள் -கலசங்களுக்கு, மங்கல மேளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க, ஒரே சமயத்தில் அபிசேகமும் புனித நீர் சொரிதல் வைபவங்களும் நடைபெற்றன.
 
* ஹெலிகாப்டர் மூலம் கோயில், கோயில் கோபுரம் மற்றும் கலசங்கள் மீது பூமழை பொழிந்ததும், எதிர்பாராவிதமாக, அதே சமயம் தன்னிச்சையாக கோயிலின் மீது  கருடன் பறந்து தரிசனம் தந்ததும் குறிப்பிடத்தக்க பல சிறப்பம்சங்களில் சில.  
 
* சென்னிமலையின் மலைக்கோயில், வளாகம், கோயில் தளங்கள்  முழுவதும் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.
 
*சென்னிமலை நகர வீதிகள் உள்ளிட்ட எல்லாத்திசைபாதை
களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
 
* லட்சக்கணக்கில் மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்ட விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காவல் துறையினர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
 
* “கலைமாமணி” பேராசிரியர், மதுரை. திரு.கு. ஞானசம்பந்தம் அவர்கள் கும்பாபிசேக நிகழ்வுகளை நேர்முக வர்ணனை செய்தார். சென்னிமலை நகரின் எல்லாத் திசைகளிலும் நீண்ட தூரங்களுக்கு ஒலி பெருக்கிகள் கட்டப்பட்டிருந்தன. அதனால், திருக்கோயில் நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொள்ள இயலாதவர்கள், வீட்டில் - ஊரில் -இருக்கும் இடத்தில் இருந்தே அவரது நேர்முக வர்ணனை கேட்டு மகிழ்ந்தனர். 
 
* விமானங்களுக்குப் பூசை செய்து கும்பாபிசேக தீர்த்தங்கள் கலசத்தின் மீது ஊற்றப் படும்போது, 
கலசங்கள் - கோபுரங்கள் -மக்கள் மீது  ஹெலிகாப்டரில் இருந்து மலர் மழை பொழிந்ததும் சற்றும் எதிர்பாராத விதமாக கோயில் வளாகத்தின் மேல் கருடன் பறந்து சென்று ஆசீர்வதித்ததும் நெகிழ்வுடன் - மகிழ்வுடன் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் !!

கருத்துகள்