ரூ .10,000 க்கு 5000mAh பேட்டரி + ட்ரிபிள் ரியர் கேமரா - வேற என்ன வேணும் ?

 

ரூ .10,000 க்கு 5000mAh பேட்டரி + ட்ரிபிள் ரியர் கேமரா - வேற என்ன வேணும் ?


  இன்பினிக்ஸ் தனது புதிய ஸ்மார்ட்போன் ஆன இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 மாடலை உலகளாவிய வலைத்தளத்தில் பட்டியலிட்டுள்ளது . என்ன விலை ... என்னென்ன அம்சங்கள் ... இதோ முழு விவரங்கள் ... 

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 மாடல் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .இந்த ஸ்மார்ட்போன் ஒப்பீட்டளவில் மெலிதான பெஸல்கள் மற்றும் அடர்த்தியான கன்னம் கொண்ட ஒரு பெரிய டிஸ்பிளேவுடன் வருகிறது . செல்பீ கேமராவிற்காக முன்பக்கத்தில் ஒரு சிறிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது . இந்த ஸ்மார்ட்போன் நான்கு நாள் பேட்டரி ஆயுளை வழங்கும் திறனை கொண்டு இருப்பதாக இன்பினிக்ஸ் கூறுகிறது . இதன் க்ளோபல் வேரியண்ட் ஆனது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை பின்புறத்தில் பேக் செய்கிறது , மேலும் இது ஒரு செவ்வக தொகுதிக்குள் ஃபிளாஷ் உடன் வைக்கப்படுகிறது . 

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 உலகளாவிய இணையதளத்தில்சிங்கிள் ரேம் மற்றும் சேமிப்பக உள்ளமைவுடன் பட்டியலிடப்பட்டுள்ளது . இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 மாடலின் விலை மற்றும் விற்பனை : இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 நிறுவனத்தின் உலகளாவிய இணையதளத்தில் சிங்கிள் 3 ஜிபி + 64 ஜிபி சேமிப்பு மாறுபாட்டில் விலை எதுவும் குறிப்பிடப்படாமல் பட்டியலிடப்பட்டுள்ளது . 

இந்த ஸ்மார்ட்போன் ஐஸ் ப்ளூ , மிட்நைட் பிளாக் மற்றும் குவெட்சல் சியான் ஆகிய மூன்று வண்ண பங்களில் வருகிறது . இதுவரையிலாக இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை குறித்த விரிவான தகவல்கள் எதுவும் இல்லை . குறிப்பாக நிறுவனத்தின் இந்திய வலைத்தளம் தற்போது வரையிலாக இந்த ஸ்மார்ட்போனை பட்டியலிடவில்லை . விலை நிர்ணயத்தை பொறுத்தவரை , இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போனின் 3 ஜி மாறுபாடு ஆனது நிறுவனத்தின் நைஜீரிய இணையதளத்தில் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ .7,800 க்கு ( 2 TH + 32 ஜிபி ) பட்டியலிடப்பட்டுள்ளது .

 இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் :

டூயல் சிம் ( நானோ ) ஆதரவு கொண்ட இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஆனது ஆண்ட்ராய்டு 10 ( கோ பதிப்பு ) கொண்டு இயங்குகிறது . இது 6.6 இன்ச் அளவிலான 720x1,600 பிக்சல்கள் ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது . ஹுட்டின் கீழ் , இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் உடன் பெயர் குறிப்பிடப்படாத 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ப்ராசஸர் உடன் வருகிறது . ஸ்மார்ட்போனின் நைஜீரிய மாறுபாடு 1.3GHz வேகத்தின் கீழ் ஒரு ( PU உடன் வருகிறது மற்றும் 2 ஜிபி ரேம் - ஐ கொண்டுள்ளது . 

கேமராக்களைப் பொறுத்தவரை , இதன் உலகளாவிய மாறுபாடு மூன்று பின்புற கேமரா அமைப்போடு வருகிறது , நைஜீரிய மாறுபாடு டூயல் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . உலகளாவிய மாறுபாட்டைப் பொறுத்தவரை , இதன் கேமரா அமைப்பில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் இரண்டு QVGA சென்சார்கள் உள்ளன . முன்பக்கத்தில் , இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5 மாடலானது ஒரு 8 மெகாபிக்சல் சென்சாருடன் வருகிறது . இதன் நைஜீரிய மாறுபாடு 8 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் பின்புறத்தில் கியூவிஜிஏ சென்சாரை கொண்டுள்ளது . செல்பீ கேமராவை பொறுத்தவரை உலகளாவிய மாறுபாட்டைப் போலவே 8 எம்பி சென்சாரை கொண்டுள்ளது .

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது 64 ஜிபி ( குளோபல் ) மற்றும் 32 ஜிபி ( நைஜீரியா ) சேமிப்பகத்துடன் வருகிறது , இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்கக்கூடியது ( உலகளாவிய மாறுபாட்டிற்கு 256 ஜிபி வரை மற்றும் நைஜீரிய மாறுபாட்டிற்கு 128 ஜிபி வரை ) . இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை , இது வைஃபை , 4 ஜி , ஜிபிஎஸ் , ப்ளூடூத் , 3.5 மிமீ ஹெட்ஜாக் மற்றும் சார்ஜ் செய்ய மைக்ரோ - யூ.எஸ்.பி போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது . 

நைஜீரிய மாறுபாட்டில் உள்ள ஒரே வித்தியாசம் 4 ஜி இணைப்பு இல்லாததுதான் . இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 மாடலானது ஒரு பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் 10W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது . மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆம்பியன்ட் லைட் சென்சார் , ப்ராக்ஸிமிட்டி சென்சார் மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளது . அளவீட்டில் புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஆனது 165.4X73.4X8.75 மிமீ உள்ளது .

கருத்துகள்