ரூ .10,000 க்குள் இதைவிட சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் கிடைக்காது
ரூ .10,000 க்குள் இதைவிட சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் கிடைக்காது
நீங்களொரு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டு உள்ளீர்கள் என்றால் ? அதுவும் குறிப்பாக உங்களின் பட்ஜெட் ரூ .10,000 தான் என்றால் , வெல்கம் ! நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள் ! ஏனெனில் தற்போது இந்தியாவில் வாங்க கிடைக்கும் சில அட்டகாசமான பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை பற்றிய தொகுப்பே இது . இந்த தொகுப்பை பொறுத்தவரை , நாங்கள் கூறும் " பட்ஜெட் " என்னு வார்த்தைக்கு " ரூ .10,000 க்குள் " என்கிற மற்றொரு அர்த்தமும் உள்ளது .
இந்த பட்டியலில் உள்ள 7 ஸ்மார்ட்போன்களும் வெறுமனே ரூ .10,000 க்குள் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்ல , விலையை மீறிய அம்சங்களை கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன்களும் கூட என்பதை கவனத்தில் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம் !
ரெட்மி நோட் 8 :
இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ .9,999 ஆகும் . சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அட்டகாசமான பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் ரெட்மி நோட் 8 ஒன்றாகும் . இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை , 6.39 இன்ச் முழு எச்டி + ( 1080 எக்ஸ் 2340 ) டிஸ்ப்ளே , டாட் நாட்ச் வடிவமைப்பு , க்வால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC ப்ராசஸர் , 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் மெமரி , 43MP + 8MP + 2MP + 2MP EGOTEN1560615 500TL க்வாட் - கேமரா அமைப்பு , 13MP செல்பீ கேமரா , 28W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 4,000 mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது .
ரியல்மி 5 :
இந்த ஸ்மார்ட்போனின் தொடக்க விலை ரூ . 9,990 ஆகும் .
ரியல்மி 5 ஸ்மார்ட்போனின் பிரதான அம்சங்களை பொறுத்தவரை , இது 5.5 இன்ச் எச்டி + ( 720 x 1600 ) எல்சிடி பேனல் , வாட்டர் டிராப் வடிவமைப்பு , ஸ்னாப்டிராகன் 665 SoC ப்ராசஸர் ,4 | ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் மெமரி , 12MP + 8MP + 2MP + 2MP என்கிற க்வாட் - கேமரா அமைப்பு , 13MP செல்பீ கேமரா , 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது .
விவோ யு 10 :
இதன் தொடக்க விலை ரூ .8,990 ஆகும் . விவோ யு 10 ஆனது 6.35 ஹாலோ ஃபுல்வியூ எச்டி + ( 720 x 1544 ) ஐபிஎஸ் டிஸ்பிளே , வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பு , 8MP செல்பீ கேமரா , 13MP + 8MP + 2MP சென்சார்கள் கொண்ட ட்ரிபிள் - லென்ஸ் அமைப்பு , 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி , க்வால்காம் ஸ்னாப்டிராகன் 665 ப்ராசஸர் , 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு கொண்ட 5,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது .
ரியல்மி 3 ப்ரோ :
இந்த ஸ்மார்ட்போனின் தொடக்க விலை ரூ .9,999 ஆகும் . ரியல்மி 3 ப்ரோ ஆனது 6.3 இன்ச் முழு எச்டி + ( 1080 X 2340 பிக்சல்கள் ) டிஸ்பிளே , 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் மெமரி , க்வால்காம் ஸ்னாப்டிராகன் 710 ப்ராசஸர் , பின்புறத்தில் 16 எம்பி ( எஃப் / 1.7 ) + 5 எம்பி ( எஃப் / 2.4 ) சென்சார் கொண்ட டூயல் கேமரா அமைப்பு , 25 எம்பி செல்பீ கேமரா , 20w voOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் கூடிய 4,045 mAh பேட்டரி போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது .
மோட்டோ ஒன் மேக்ரோ :
இந்த மோட்டோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ .9,999 ஆகும் . ஒன் மேக்ரோவின் பிரதான அம்சங்களை பற்றி பேசுகையில் , இது 5.2 இன்ச் எச்டி + மேக்ஸ் விஷன் ( 720 X 1520 பிக்சல்கள் ) டிஸ்ப்ளே , 8 எம்பி செல்பீ கேமரா , 13MP + 2MP + 2MP சென்சார்களை கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பு , 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி , மீடியா டெக் ஹீலியோ பி 70 SoC ப்ராசஸர் , 10W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு கொண்ட 4,000 mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது .
ரெட்மி 8 ஸ்மார்ட்போன் :
இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ .7,999 ஆகும் . ஆரா மிரர் வடிவமைப்பைக் கொண்டுள்ள ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் பிரதான அம்சங்களை பொறுத்தவரை , இது 6.22 இன்ச் எச்டி + ( 720 X 1520 பிக்சல்கள் ) டிஸ்ப்ளே , டாட் நாட்ச் வடிவமைப்பு , 8MP செல்பீ கேமரா , ஆக்டா கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 439 ப்ராசஸர் , 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளாக்க சேமிப்பு , யூ.எஸ்.பி டைப் - சி வழியிலான 18W பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட 5,000 எம்ஏஎச் பேட்டரி , 12MP + 2MP லென்ஸ்கள் கொண்ட டூயல் கேமரா அமைப்பு போன்றவைகளை கொண்டுள்ளது .
சாம்சங் கேலக்ஸி எம் 30 :
இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின்தொடக்க விலை ரூ .9,999 ஆகும் . கேலக்ஸி எம் 30 ஆனது 6.4 இன்ச் ஃபுல் எச்டி + சூப்பர் அமோலேட் இன்பினிட்டி - யு டிஸ்ப்ளே , 16 எம்பி செல்பீ கேமரா , வாட்டர் - டிராப் ஸ்டைல் நாட்ச் வடிவமைப்பு , 13MP + 5MP + 5MP சென்சார்களை கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பு , 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் மெமரி , எக்ஸினோஸ் 7904 ப்ராசஸர் , 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது .

கருத்துகள்
கருத்துரையிடுக