ஜியோவின் ஆகஸ்ட் 15 ஆபர் ; 5 மாதம் இலவச நெட் கால்ஸ் + டேட்டா
![]() |
| Add caption |
ஜியோவின் ஆகஸ்ட் 15 ஆபர் ; 5 மாதம் இலவச நெட் கால்ஸ் + டேட்டா
ரிலையன்ஸ் ஜியோ ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்திற்கான புதிய சலுகைகளைக் கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளது . இந்நிறுவனம் நான்கு ஆண்டுகள் என்கிற மிகக் குறுகிய காலத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனமாக மாறியுள்ளது .
அதன் மிக வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்று , அதன் சேவைகளைத் தொடங்கியபோது அறிமுகம் செய்யப்பட்ட ஜியோஃபை சாதனம் ஆகும் .
ஆரம்பத்தில் இது சந்தைக்கு வந்தபோது , இந்த தயாரிப்புக்கு பெரும் தேவை இருந்தது . 4 ஜி ஸ்மார்ட்போன் இல்லையென்றாலும் கூட , மக்கள் எங்கு சென்றாலும் வேகமான 4 நெட்வொர்க்குடன் இணைக்கவும் , அதிவேக இணையத்தைப் பெறவும் இது கைகொடுத்தது .
இந்த சாதனம் மீது ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு அட்டகாசமான சலுகையை அறிவித்துள்ளது மற்றும் இதை 2020 ஆம் ஆண்டு சுதந்திர தினத்திற்கான சிறப்பு சலுகையாகவும் குறிப்பிட்டுள்ளது .
ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ள சுதந்திரதினசலுகை :
JioFi மீது அறிவிக்கப்பட்டுள்ள சுதந்திர தின சலுகையின் கீழ் ஒருவர் ஐந்து மாதங்களுக்கான வரம்பற்ற ஆன் - நெட் அழைப்புகள் மற்றும் டேட்டாவை இலவசமாக பெறலாம் .
ஆனால் இந்த சலுகையைப் பெற , வாடிக்கையாளர் ஜியோஃபை திட்டங்களிலிருந்து ஏற்கனவே இருக்கும் விருப்பங்களில் ஒன்றை வாங்க வேண்டும் .
அபப்டியாக JioFi க்கான சிம் - ஐ ஆக்டிவேட் செய்யும் போது ஒரு வாடிக்கையாளர் தேர்வுசெய்யக்கூடிய மூன்று விருப்பங்கள் உள்ளன .
முதல் சலுகை ரூ .199 ஆகும் , இது உங்களுக்கு 1.5 ஜிபி அளவிலான தினசரி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்கும் .
அதனுடன் , நீங்கள் ஜியோ ப்ரைம் உறுப்பினருக்கு ரூ .99 கூடுதல் கட்டணம் செலுத்தலாம் , இது தினமும் 1.5 ஜிபி டேட்டா , வரம்பற்ற ஜியோ டூ ஜியோ மொபைல் அழைப்புகள் மற்றும் 1000 ஆஃப் - நெட் மொபைல் நிமிடங்கள் போன்ற நன்மைகளை 28 நாட்களும் மற்றும் 100 எஸ்எம்எஸ் / நாள் என்கிற நன்மையை 140 நாட்களுக்கு வழங்கும் ( அதாவது ஒரு மாதத்திற்கு 28 நாட்கள் என்கிற கணக்கின்படி 5 மாதங்கள் ) .
இரண்டாவது சலுகை ரூ .249 ஆகும் , இது உங்களுக்கு 2 ஜிபி அளவிலான தினசரிடேட்டாவை 28 நாட்களுக்கு வழங்கும் .
அதனுடன் , நீங்கள் ஜியோ ப்ரைம் உறுப்பினருக்கு ரூ .99 கூடுதல் கட்டணம் செலுத்தலாம் , இது தினமும் 2 ஜிபி டேட்டா , வரம்பற்ற ஜியோ டூ ஜியோ மொபைல் அழைப்புகள் மற்றும் 1000 ஆஃப் - நெட் மொபைல் நிமிடங்கள் போன்ற நன்மைகளை 28 நாட்களும் மற்றும் 100 எஸ்எம்எஸ் / நாள் என்கிற நன்மையை 112 நாட்களுக்கு வழங்கும் .
மூன்றாவது சலுகை ரூ .349 ஆகும் , இது உங்களுக்கு 3 ஜிபி அளவிலான தினசரி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்கும் .
அதனுடன் , நீங்கள் ஜியோ ப்ரைம் உறுப்பினருக்கு ரூ .99 கூடுதல் கட்டணம் செலுத்தலாம் , இது தினமும் 3 TH டேட்டா , வரம்பற்ற ஜியோ டூ ஜியோ மொபைல் அழைப்புகள் மற்றும் 1000 ஆஃப் - நெட் மொபைல் நிமிடங்கள் போன்ற நன்மைகளை 28 நாட்களும் மற்றும் 100 எஸ்எம்எஸ் / நாள் என்கிற நன்மையை 84 நாட்களுக்கு வழங்கும்வழங்கும்.
நீங்கள் JioFi சாதனத்தை வாங்க விரும்பினால் , இந்த நேரத்தில் உங்களுக்கு ரூ .1,999 செலவாகும் . நீங்கள் அதை EMI விருப்பட்டியின் கீழ் விரும்பினால் , நீங்கள் அதை மாதம் ரூ .94 என்கிற செலவின் கீழ் பெறலாம் . இந்த சாதனம் ஒரு சிறிய Wi - Fi ஆக செயல்படுகிறது மற்றும் பல சாதனங்களை அதனுடன் இணைக்கவும் அனுமதிக்கிறது .

கருத்துகள்
கருத்துரையிடுக