என்னது ஒருகிலோ இறைச்சி ஆயிரம் ரூபாயா ? .. அப்படி என்ன இருக்கு .. !
என்னது ஒருகிலோ இறைச்சி ஆயிரம் ரூபாயா ? .. அப்படி என்ன இருக்கு .. !
இன்றைய காலக்கட்டத்தில் நாம் கண்ணில் பார்ப்பதை எல்லாம் சாப்பிட தயங்குவதில்லை . அதற்கு பரிசாக கிடைப்பது நோய்கள் , இப்படி பல விஷயங்கள் நாம் கடந்துசெல்லும் வேளையில் ஒருகிலோ கோழி கறி ஆயிரம் ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா , நம்ப முடியவில்லை என்றாலும் நம்பி தான் ஆகவேண்டும் .
ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் அளவிற்கு என்ன இருக்கிறது அந்த கறியில் வாருங்கள் விரிவாக பார்ப்போம் .....
கோழியின் வரலாறு :
எம்புட்டு அங்காளி , பங்காளியாய் பழகினாலும் , சோறுனு வந்துவிட்டால் முறைப்படி கவனிக்காவிட்டால் சண்டை , சச்சரவு , தான் . அந்த அளவுக்கு பவர் புல்லானது சோறு . அப்படித்தான் , ஒரு கோழிக்காக இரு மாநிலங்கள் கட்டி உருண்டுள்ளது .
சத்தீஸ்கர் மாநிலம் ‘ கடக்நாத் கோழிகள் எங்களுக்கே சொந்தம் என்று ' புவிசார் குறியீடு ' கேட்டு மனு அளிக்க , மத்திய பிரதேச மாநிலமோ ' செல்லாது ... செல்லாது கோழி எங்கூருக்கேசொந்தம் என்று கூறியதுடன் , கடக்நாத் கோழிகளின் விற்பனைக்காக ' MP kadaknath ' என்ற செயலியையும் வெளியிட்டது . இறுதியாய் , மத்திய பிரதேசத்துக்கே கடக்நாத் கோழிக்கான புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது .
இரண்டு மாநிலங்கள் அடித்துக் கொள்ளும் அளவுக்கு கடக்நாத் கோழியில் அப்படியின்ன ஸ்பெஷல் என்றால் .... ஸ்பெஷல் தான் . அது என்ன கடக்நாத் சிக்கன் ? மத்திய பிரதேசத்தின் நாட்டுக் கோழிகளான இக்கோழியை அம்மாநில மக்கள் ‘ காளி மாசி ' என்ற பெயரில் அழைக்கிறார்கள் . ' காளி மாசி ' என்றால் காளியின் தங்கை என்று பொருள்படும் .
நம்மூரில் கருங்கோழிகள் என்றும் அழைக்கப்படுகிறது . நல்லா கரு , கருவெனயிருக்கும் கடக்நாத் கோழியின் இறக்கைகள் மட்டுமின்றி , அதன் இறைச்சி , எலும்பு , இரத்தம் , என சகலமும் கறுப்பு தான் . இந்தக் கோழிகளில் மெலனின் என்ற நிறமி அதிகம் இருப்பதே இதன் கறுமைத்தன்மைக்குக் காரணம் .
ஷாஜகான் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் ' கறுத்தக்கோழி மிளகுப் போட்டு வறுத்து வச்சிருக்கேன் ' என்று நடிகை மீனா சொல்வதும் கடக்நாத்தை தான் . இந்தக் கோழியைச் சாப்பிடுவதால் , இதன் மெலனின்தன்மைகாரணமாக நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது என்றும் , ஆஸ்துமா மற்றும் கல்லீரல் பிரச்னைகளை போக்கவல்லது என்றும் சொல்லப்படுகிறது .
இதன் மருத்துவ குணங்களுக்காகவே கடக்நாத் கோழிகளுக்கு சந்தையில் மவுசு ஜாஸ்தி . தமிழகத்திலும் கருங்கோழி பண்ணைகள் வைத்து நடத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது . அவர்களில் ஒருவர் தான் தமிழ்ச்செல்வன் . சென்னை - புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில் வெண்ணாங்குபட்டு கிராமத்தில் கோழிப்பண்ணை அமைத்திருக்கிறார் .
கடக்நாத் மட்டுமின்றி அசில் , சிறுவிடை , நிகோபாரி இனக் கோழிகளையும் மேய்ச்சல் முறையில் கடந்த 5 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார் . “ கால்நடை மற்றும் விவசாயத்தின் மீது பள்ளி வயதிலிருந்தே ஆர்வம் அதிகம் . கோழிப் பண்ணை வைக்கத் திட்டமிட்டப் பின்னும் , அதிகப்படியான முதலீடு போடுவதில் தயக்கமும் , அச்சமும் இருந்ததது . 2001 ம் ஆண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் பிராய்லர் கோழி பண்ணை அமைத்தேன் .
சொந்த முதலீட்டில் பண்ணை அமைத்துவிட்டால் , கோழிக்குஞ்சும் , தீவனமும் நிறுவனங்களே கொடுத்துவிடுவர் அதில் வளர்ப்புக் கூலி மட்டும் பண்ணையாளர்களுக்கு கிடைக்கும் . ஆனால் , அது பண்ணையாளர்களை நசுக்கும் நாசக்கார வேலை . கோழிப்பண்ணை தமிழ்ச்செல்வன் ( இடது ) தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயச் சங்கத்தில் மாநில துணைத் தலைவராக பதவி வகித்து அதை எதிர்த்து தொடர் போராட்டங்களும் , எதிர்ப்புக் குரலும் கொடுத்து வந்தேன் .
ஆனாலும் , நிறுவனங்களிடமே மீண்டும் செல்ல வேண்டிய நிலை . ” அதனால் , 35 லட்ச ரூபாய் நஷ்டத்தினையும் பாராமல் பிராய்லர் கோழி வளர்ப்பை கைவிட்டேன் . 2013 ம் ஆண்டு நாட்டுக் கோழி வளர்ப்பில் ஈடுப்பட்டேன் , ” என்றார் . நம் ஊரில் சந்தைக்காகவும் , இறைச்சிக்காகவும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் அசில் ' ரக கோழிக் குஞ்சுகள் நூறை முதலீட்டாகக் கொண்டு பிசினசை தொடக்கியுள்ளார் .
அப்போது தான் தனித்தன்மையடன் புதிததாக செய்யவேண்டும் என்று சிந்தித்தவருக்கு , கடக்நாத் கோழிகள் பற்றி தெரிய வந்துள்ளது . மருத்துவக் குணங்கள் மிகுதியாகவும் , சந்தையில் அதிக வரவேற்புடன் கருங்கோழிகள் இருந்ததால் , நண்பரின் உதவியுடன் மத்திய பிரதேசத்தில் இருந்து 250 கோழிக் குஞ்சுகள் வாங்கி வந்து வளர்ப்பைத் தொடங்கி உள்ளார் .
முட்டைகள் :
கடக்நாத் கோழியின் முட்டைகளும் கறுப்பு நிறத்தில் உள்ளன . எல்லா நாட்டுக்கோழிகளின் முட்டைகளைப் போலவே இதிலும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது . வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது . மற்ற முட்டைகளைவிடவும் இதில் அமினோ அமிலங்கள் அதிகம் என்று சொல்லப்படுகிறது .
பிரசவத்துக்குப் பிறகு வரும் தலைவலி , ஆஸ்துமா , சிறுநீரக வீக்கம் போன்றவற்றுக்குச் சிறந்த மருந்தாக இந்த முட்டைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது .
மருத்துவ குணங்கள் :
இந்த இறைச்சியை இரத்த கொதிப்பு , இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் நன்றாகச் சாப்பிடலாம் ... இறைச்சியில் அதிகமான அமினோ அமிலங்களும் , மனிதர்களுக்குத் தேவையான ஹார்மோன் சத்துக்களும் உள்ளன . மத்தியப் பிரதேசம் , மகாராஷ்ட்ரா , தில்லி போன்ற வடமாநிலத்து மக்கள் இக்கோழிகளின் இறைச்சி , ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதோடு , வயாக்ரா மாத்திரை போல் விந்தணுக்களின் வீரியத்தையும் அதிகரிக்கும் என நம்புகின்றனர் .
மைசூரில் செயல்படும் உணவு ஆராய்ச்சிக் கழகம் , கருங்கோழி இறைச்சி இதய நோயாளிகளுக்கு மிகவும் நன்மை தரக் கூடியது என , சான்றளித்துள்ளது ... சீன நாட்டின் மருத்துவத்திலும் , உணவிலும்கூட இந்தக் கருங்கோழிகள் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன .
இப்படி பல ஆராய்ச்சிகளில் பல நன்மைகளை முன்வைக்கப்படுவதால் இதன் விலை ஆட்டிறைச்சி , மாட்டிறைச்சி என அனைத்தையும் பின்னுக்கு தள்ளி கிலோ ரூ .1000 - த்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது . தமிழ்நாட்டில் உள்ள படித்த இளைஞர்கள் நகரம் , கிராமம் என பாராமல் அனைவரும் இதை தனக்கு கிடைத்த இடத்தில் ஆரோக்கியமாக வளர்த்து லாபம் ஈட்டி வருகின்றனர் .


கருத்துகள்
கருத்துரையிடுக