இந்தக் கல்லூரியில் சேர வெறும் ஒரு ரூபாய் தான் கட்டணம் ... எவ்வளவு நல்ல மனசு பாருங்க !

 இந்தக் கல்லூரியில் சேர வெறும் ஒரு ரூபாய் தான் கட்டணம் ... எவ்வளவு நல்ல மனசு பாருங்க ! 

      

      மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கல்லூரி ஒன்று , மாணவர் சேர்க்கைக்கு ஒரு ரூபாய் கட்டணமாக நிர்ணயித்து அசத்தியுள்ளது . கொரோனா வைரஸை காரணம்காட்டி மத்திய மற்றும் மாநில அரசுகள் போட்டுள்ள ஊரடங்கு உத்தரவு சட்டத்தால் , பலரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர் . இந்த நிலையில் , மேற்கு வங்காள மாநிலம் நைஹாட்டியில் உள்ள ரிஷி பங்கிம் சந்திரா கல்லூரி , மாணவர் சேர்க்கைக்கு ஒரு ரூபாய் கட்டணமாக நிர்ணயித்துள்ளது .


 வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லூரியில் அனைத்துப் பாடப்பிரிவுகளை சேர்த்து மொத்தம் 2,400 இடங்கள் உள்ளன . இதுதொடர்பாக , அக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் சஞ்சிப் சஹா கூறியுள்ளதாவது : " ஆன்லைன் படிவங்களுக்கான கட்டணம் வழக்கம்போல் ரூ .60 ஆக இருக்கும் . இருப்பினும் , அனைத்து பட்டப் படிப்புக்களுக்கான சேர்க்கைக் கட்டணம் ஒரு ரூபாயாக இருக்கும் . 


மாணவர்களுக்கான ஒரே நுழைவு கட்டணமாக , ஒரு ரூபாயை நிர்ணயிக்க கல்லூரி நிர்வாக குழு முடிவு செய்தது . கொரோனா தொற்று மற்றும் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது . கொரோனா தொற்றால் பெற்றோர் பலர் நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் . இவர்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது . " என தெரிவித்துள்ளார் . இந்த அறிவிப்புக்கு பெற்றோர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள் .

கருத்துகள்