நிறைய பணம் வந்துவிட்டது ... கைலாசாவுக்கு வாருங்கள் .. அழைக்கும் நித்தி
நிறைய பணம் வந்துவிட்டது ... கைலாசாவுக்கு வாருங்கள் .. அழைக்கும் நித்தி
பல்வேறு குற்றவழக்கில் தேடப்பட்டு வருபவருமான பிரபல சாமியார் நித்தியானந்தா தற்போது தலைமறைவாக உள்ளார் . அவர் இதுவரை எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது .
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கைலாசா என்னும் நாட்டை உருவாக்கி தன்னை அந்நாட்டின் பிரதமராக பிரகடனப்படுத்தி கொண்டார் . இதைத்தொடர்ந்து கைலாசா நாட்டுக்கென்று தனிபாஸ்போர்ட்டையும் வெளியிட்டார் . மேலும் கைலாசாவுக்கு குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்தார் .
இதைத்தொடர்ந்து சர்வரே குழம்பி நிற்கும் அளவிற்கு தாறுமாறாக பலர் பதிலளிக்க தொடங்கினர் . இந்நிலையில் கடந்த சில மாதங்களாக எந்த அறிவிப்பையும் வெளியிடமல் இருந்த நித்தியானாந்தியா . சமீபத்தில் புயலை கிளப்பும் அளவிற்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் .
அது என்னவென்றால் கிருஷ்ண ஜெயந்தியைமுன்னிட்டு தனது பக்தர்களுக்கு வாழ்த்து செய்தியோடு , கைலாசா பற்றிய முக்கிய அறிவிப்பும் ஆகும் . அதாவது தான் உருவாக்கிய கைலாசா நாட்டிற்கு தேவையான கரன்சியை அச்சடித்து விட்டதாகவும் , அதற்கென தனி வங்கியை உருவாக்கியுள்ளதாகவும் அறிவித்தார் .
இத்தோடு இல்லாமல் விநாயகர் சதுர்த்தியன்று முக்கிய அறிவிப்பையும் வெளியிட போவதாக கூறி புதிய பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளார் .
நித்தியானாந்தா எங்கே எந்த தீவை வாங்கிதனி அரசை பிரகடனம் படுத்தியுள்ளார் என்று உறுதியாக தெரியாத நிலையில் அவர் , கியூபா , மெக்சிகோவுக்கு அருகில் உள்ள கரீபியன் தீவில் உள்ள குட்டிநாடான பெலிசில் பதுங்கி இருப்பதாகவும் , அந்நாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட்டையும் வைத்திருப்பதாகவும் உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன .
கர்நாடகா , குஜராத் மாதுல நீதிமன்றங்களில் அவர் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து நேரலையில் தோன்றி உலகம் முழுவதுமெ உள்ள தனது சீடர்களுக்கும் , பக்தர்களுக்கும் சொற்பொழிவாற்றி வருகிறார் .
சர்வதேச போலீசார் நித்தியானந்தாவுக்கு புளு கார்னர் நோட்டீசை பிறப்பித்துள்ளது . ஆனாலும் நித்தியை போலீசாரால் கைது செய்யமுடியவில்லை . இந்நிலையில் நித்தியானாந்தா வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில் , எனக்கு நிறைய நன்கொடைகள் கிடைத்துள்ளது , அவற்றை நல்ல காரியங்களுக்கு செலவிட தொடங்கியுள்ளேன் , வாடிக்கன் வாங்கியை மாதிரியாக கொண்டு ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா உருவாக்கப்பட்டுள்ளது .
300 பக்க பொருளாதார கொள்கையும் தாயார் செய்துள்ளோம் , கைலாசா நாட்டுக்கான பணமும் வடிவமைக்கப்பட்டுள்ளது . உள்நாட்டுக்கு ஒருகரன்சியும் , வெளிநாட்டுக்கு ஒரு கரன்சியும் அச்சடித்துள்ளோம் .
கைலாசா ரிசர்வ் வங்கி சட்டத்தின்படி தொடங்கப்பட்டுள்ளது . கைலாசாவுக்கான கரன்சி பெயர் , வடிவமைப்பு விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடப்படும் . சட்டத்திற்கு புறம்பாக எதுவும் நடக்காது என தெரிவித்துள்ளார்

கருத்துகள்
கருத்துரையிடுக