ரஷ்யாவின் ஸ்புட்னிக் விதடுப்பூசியின் முதல் கட்ட தொழிற்சாலை உற்பத்தி துவக்கம்

 ரஷ்யாவின் ஸ்புட்னிக் விதடுப்பூசியின் முதல் கட்ட தொழிற்சாலை உற்பத்தி துவக்கம் 



ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் வி என்ற கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் கட்ட தொழிற்சாலை உற்பத்தி துவங்கியுள்ளது . ஆகஸ்ட் இறுதியில் இவை முன்கள பணியாளர்களுக்கு கிடைக்கும் .

 ரஷ்யாவின் காமாலேயா ஆராய்ச்சி நிறுவனமும் , பாதுகாப்பு அமைச்சகமும் இணைந்து அந்நாட்டின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரித்துள்ளன . 

கடந்த 11 - ம் தேதி அந்நாட்டு அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக இத்தவலை அதிபர் புடின் வெளியிட்டார் . ரஷ்யாவின் இந்த தடுப்பூசி குறித்து வல்லரசு நாடுகள் சந்தேகம் கிளப்பியுள்ளன . 

கௌரவத்திற்காக அவசர கதியில் தடுப்பூசியை அறிவித்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளன . இது போன்ற சர்ச்சைகளை தடுக்கவே தனது மகளுக்கு இத்தடுப்பூசியை செலுத்தியுள்ளார் புடின் . 

இத்தடுப்பூசி கொரோனாவிலிருந்து 2 ஆண்டுகள்பாதுகாப்புஅளிக்குமாம்.இந்நிலையில் தடுப்பூசிக்கான தொழிற்சாலை உற்பத்தியை ரஷ்யா துவங்கியுள்ளது . முதலில் அந்நாட்டு மருத்துவர்கள் , சுகாதார பணியாளர்கள் போன்ற முன்கள வீரர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படும் .

 பின்னர் அனைத்து ரஷ்யர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது . ஏற்கனவே 100 கோடி தடுப்பூசிகளுக்கான விண்ணப்பங்களை உலக நாடுகளிடமிருந்து ரஷ்யா பெற்றுள்ளது .

கருத்துகள்