நாள்பட்ட வயிற்று வலிக்கு அகத்திக்கீரை சாப்பிடுங்க - ஓடிப் போயிடும் !
நாள்பட்ட வயிற்று வலிக்கு அகத்திக்கீரை சாப்பிடுங்க - ஓடிப் போயிடும் !
தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும் . இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை . இது சுவையானது . தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது . வீட்டுத் தோட்டங்களிலும் , வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது . அகத்தி இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த , ஒரு மாதத்தில் இருமல் , இரைப்பு மாறும் . இலைச்சாறை உறிய , தலைநீர் இறங்கும் .
அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து , ஒரு ஸ்பூன் சாறோடு , இதே அளவு தேன் கலந்து அருந்த , வயிற்றுவலி தீரும் . இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவர புண் ஆறும் .
அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர , நாள்பட்ட வயிற்றுவலி மாறும் . அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும் . இக்கீரையை உணவில் சேர்த்து வர , மலச்சிக்கல் தீரும் . பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட , தலைவலி மாறும் . அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து , இதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல் , சளி தீரும் . அகத்திக்கீரை சாறு இரு துளி மூக்கில் விட தும்மல் , ஜலதோஷம் தீரும்.
அகத்திகீரை பொரியல் செய்ய தேவையான பொருட்கள் :
அகத்திக்கீரை - 1 கட்டு சிவப்பு
மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 12
தேங்காய்ப் பூ - 2 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தாளிக்க - எண்ணெய் , கடுகு , உளுத்தம்பருப்பு , கறிவேப்பிலை
முதலில் சின்ன வெங்காயத்தைப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும் . அகத்திக் ரையை உருவி , அரிசி களைந்த நீரில் கழுவிக் கொள்ளவும்.அதன் பின் பொடியாக அரியவும் . அரிசி களைந்த நீரை அளவாக ஊற்றி வேக வைக்கவும் . வெந்ததும் நீரை வடித்து விடவும்.பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி , எண்ணெய் காய்ந்ததும் , கடுகு , உளுத்தம்பருப்பு போட்டு , சிவப்பு மிளகாய் கிள்ளிப் போடவும்.அரிந்து வைத்துள்ள சின்னவெங்காயத்தைப் போட்டு , வதக்கவும் . வெந்த கீரையைப் போட்டு , உப்பு சேர்த்து , கிளறவும் . தேங்காய்ப் பூவையும் சேர்த்து , கிளறி இறக்கவும் .

கருத்துகள்
கருத்துரையிடுக