மெட்ராஸ் கண்ட மாமனிதர் எம் . ஏ . சிதம்பரம் ... அப்படி என்ன சாதனை செய்தார் ?

 மெட்ராஸ் கண்ட மாமனிதர் எம் . ஏ . சிதம்பரம் ... அப்படி என்ன சாதனை செய்தார் ?


 மதுரையில் பிறந்து மெட்ராசிற்கு வந்து பல துறைகளில் தலைவராக இருந்து பல சேவைகளை ஆற்றியுள்ள , எம் . ஏ . சிதம்பரம் மெட்ராஸ் கொண்டாட வேண்டிய மனிதர்களில் ஒருவர் .

 இந்தியாவிலே இரண்டாவது பழைமை வாய்ந்த விளையாட்டு அரங்கமான சென்னை சேப்பாக்கம் எம் . ஏ . சிதம்பரம் விளையாட்டு அரங்கம் 1916 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது . தொழிலதிபரும் விளையாட்டு ஆர்வலருமான எம் . ஏ . சிதம்பரம் பெயர் இந்த அரங்கத்திற்குச் சூடப்பட்டுள்ளது . 

இவர் முதன்முதலில் இந்தியாவில் ஸ்கூட்டர் தயாரித்த ஆட்டோமொபைல் நிறுவனத்தைப் பிரிட்டிஷ் நிறுவனத்திடம் இருந்து வாங்கினார் . இவர் ஸ்பிக் நிறுவனத்தின் தலைவராக இருந்தார் . மேலும் , பி சி சி இ யின் தலைவராகவும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் திகழ்ந்தார் .

 இவர் சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கு கட்டுவதில் முக்கிய பங்கு வகித்ததன் காரணமாக இவரதுபெயர் அரங்குக்கு சூடப்பட்டது . மேலும் , கிரிக்கெட் மட்டும் அல்லது அகில இந்தியப் புல்வெளி டென்னிஸ் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார் . 1955 மேயர் ஆகவும் பணி புரிந்தார்.


தமிழ் இசை சங்கத்தைத் தொடங்கி தமிழ் இசைக்கு பெரும் தொண்டு ஆற்றினார் . சூழலியாளர் , தொழிலதிபர் , விளையாட்டு ஆர்வலர் , தமிழ் இசை சங்கத்தைத் தொடங்கியவர் என்று பன்முகத் தன்மை கொண்ட இவரது வாழ்க்கை வரலாறு " விஷன் அன்லிமிடெட் " என்ற பெயரில் வெளி வந்து உள்ளது .

கருத்துகள்