அமெரிக்கர்களை ' சித்தியை தேட வைத்த கமலா ஹாரிஸ் !
அமெரிக்கர்களை ' சித்தியை தேட வைத்த கமலா ஹாரிஸ் !
அமெரிக்காவில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் தேர்தல் மாநாட்டு உரையில் சித்தி என்ற தமிழ் வார்த்தையை அதிகம் பயன்படுத்தினார் .
அமெரிக்க அரசியலில் முதன்முதலாக ஒரு தமிழ் வார்த்தை உச்சரிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் நெகிழ்ச்சியடைந்து , அந்த வார்த்தையை டிரெண்ட் ஆக்கியுள்ளனர் .
ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்காக போட்டியிடுகிறார் . அண்மையில் , அமெரிக்காவில் நடந்த தேர்தல் மாநாட்டில் பேசியுள்ளார் .
அந்த உரையில் தனது அம்மாவை குறித்தும் குடும்பத்தினர் குறித்தும் நிகழ்ச்சியாக பேசியுள்ளார் . அதில் “ எனக்கு குடும்பம்தான் அனைத்தும் என்று சொல்லுவார் .
அதன்படி எனது பிள்ளைகள் , சித்தி , உறவினர்கள் , சகோதரி மாயா ஆகியோர்தான் என் குடும்பம் . அவர்களுடைய வார்த்தைகளை எப்பொழுதுமே பொன்மொழிகளாக பின்பற்றுவேன் .
அதுவே என் முன்னேற்றத்திற்கு காரணம் ” என்று தெரிவித்துள்ளார் . இதற்கிடையில் அவர் பேசும்போது ' சித்தி ' என்ற வார்த்தையைபயன்படுத்தினார் .
அமெரிக்க அரசியலில் முதல் முறையாக ஒரு தமிழ் வார்த்தை உச்சரிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் இதை வைரலாக்கி வருகின்றனர் .
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கானப் பிரச்சாரத்தில் இந்திய மொழியில் அதுவும் தமிழில் ' சித்தி ' என்று குறிப்பிட்டது அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் குறிப்பாக தமிழர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது .
மேலும் , இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் உணர்ச்சிப்பூர்வமானக் கருத்துகளைப் பதிவு செய்து வருவதைப்பார்த்த அமெரிக்கர்கள் உள்ளிட்ட பலரும் தற்போது சித்தி என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்பதை இணையதளத்தில் தேடி வருகின்றனர் .
கமலா ஹாரிஸின் தாயார் ஷ்யாமளா கோபாலன் சென்னையில் பிறந்தவர் என்பதும் இவரது சித்தி சரளா கோபாலன் தற்போதும் இங்கு வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

கருத்துகள்
கருத்துரையிடுக