பார்சலில் வரும் மர்ம விதைகள் - எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்


 பார்சலில் வரும் மர்ம விதைகள் - எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல் 


தமிழ்நாட்டில் சந்தேகத்திற்கிடமான மர்ம விதைகள் வந்துள்ளதா என அனைத்து மாவட்ட விதை விற்பனை மையங்களில் ஆய்வு நடத்த வேளாண்துறை உத்தரவிட்டுள்ளது . 

அமெரிக்கா , கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்த சில வாரங்களாக சீனாவில் இருந்து மர்ம பார்சல்கள் வந்துள்ளன . இந்த பார்சல்களில் மர்ம விதைகள் இருந்துள்ளது . இது விவசாயத்தை அழிக்கக்கூடிய உயிரி ஆயுதமாக இருக்கலாம் என்று அமெரிக்க வேளாண்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது .

 இந்த சூழலில் மத்திய விவசாயத்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது .

 அதில் , நம் நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பார்சலில் வரும் மர்ம விதைகள் குறித்து மாநில அரசுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இந்தியாவின் பல்லுயிர்ச்சூழலுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் . 

எனவே , அனைத்து மாநில விவசாயத்துறை , மாநில விவசாய பல்கலைக்கழகங்கள் , விதைச்சங்கங்கள் , மாநில விதை சான்றிதழ் ஏஜென்சிகள் , விதைக் கழகங்கள் , இந்திய விவசாய கவுன்சில் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவை மர்ம விதைகள் விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது . 

அமெரிக்கா , கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு சீனாவில் இருந்து மர்ம விதைகள் அனுப்பப்பட்ட நிலையில் , எச்சரிகையாக இருக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது .


கருத்துகள்