இணையதளத்தில் வைபவ் - வின் ‘ லாக்கப் ' இன்று வெளியாகிறது
இணையதளத்தில் வைபவ் - வின் ‘ லாக்கப் ' இன்று வெளியாகிறது
கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் 4 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கின்றன . இதனால் படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக இணையதளத்தில் வெளியிட தொடங்கி உள்ளனர் . ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் , கீர்த்தி சுரேசின் பெண்குயின் , வரலட்சுமி நடித்துள்ள டேனி ஆகிய படங்கள் ஓ.டி.டி தளத்தில் வந்தன .
இந்தநிலையில் வைபவ் , வெங்கட்பிரபு , வாணிபோஜன் , பூர்ணா ஆகியோர் நடித்துள்ள லாக்கப் படமும் இன்று ( 14 ஆம் தேதி ) இணையதளத்தில் வெளியாகிறது . இந்த படத்தைநடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார் . எம்.ஜி.சார்லஸ் இயக்கி உள்ளார் . இது குறித்து வைபவ் கூறும்போது , துப்பறியும் திகில் கதையம்சம் உள்ள படம் லாக்கப் கதையும் கிளைமாக்சும் வித்தியாசமாகவும் எதிர்பாராத திருப்பங்களுடனும் இருக்கும் . நானும் வெங்கட் பிரபுவும் போலீஸ் அதி காரிகளாக வருகிறோம் .
திரைக்கதை விறுவிறுப்பாக நகரும் . தியேட்டர்கள் திறக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் . அதோடு ரிலீசுக்குபல பெரிய பட்ஜெட் படங்கள் வரிசையில் உள்ளன . எனவேதான் ஓ.டி.டி தளத்தில் ரிலீஸ் செய்கிறோம் . வீட்டில் குடும்பத்தோடு அதிகமானோர் . லாக்கப் படத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது . எனது காட்டேரி , ஆலம்பனா ஆகிய படங்கள் தியேட்டரில் ரிலீசாகும் ” என்றார் .

கருத்துகள்
கருத்துரையிடுக