கொரோனா தடுப்பூசி ரெடி - ரஷ்ய அதிபர் அறிவிப்பு !
கொரோனா தடுப்பூசி ரெடி - ரஷ்ய அதிபர் அறிவிப்பு !
கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி ரஷ்யாவில் அதிகாரப்பூர்மாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார் . உலகின் பெருந்தொற்றாக வலம் வந்து கொண்டிருக்கும் கொரோனா தொற்றால் தற்போது வரை 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .
இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா , ரஷ்யா , பிரிட்டன் , இந்தியா என அனைத்து நாடுகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளன . இதில் ஒரு சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் மனிதர்கள் மீதானபரிசோதனையில் உள்ளது .
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியின் பரிசோதனை மனிதர்கள் மீது நடத்தப்பட்டதில் அது வெற்றியடைந்ததாக ரஷ்யா கடந்த மாதம் அறிவித்தது .
அதைத் தொடர்ந்து கடந்த கடந்த வாரம் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ , கொரோனா தடுப்பூசிக்கான பரிசோதனைகள் நிறைவடைந்ததாகவும் , வரும் அக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்றும் கூறினார் .
இந்நிலையில் , இன்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் , உலகின் முதல் கொரோனா தடுப்பூசி ரஷ்ய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக வீடியோ கான்பரன்சில் அறிவித்தார் .
மேலும் , தனது மகள்களில் ஒருவர் தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறினார் . இந்த தடுப்பூசி முதலில் மருத்துவ பணியாளர்கள் , ஆசிரியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்படும் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர் .

கருத்துகள்
கருத்துரையிடுக