பிஎஸ்என்எல் புதிய முயற்சி : இனி ஒவ்வொரு வீட்டிற்கும் இன்டர்நெட் எளிதாக பெறலாம் !

 பிஎஸ்என்எல் புதிய முயற்சி : இனி ஒவ்வொரு வீட்டிற்கும் இன்டர்நெட் எளிதாக பெறலாம் ! 



பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் புதிதாக புக் மை ஃபைபர் ( BookMyFiber ) என்ற போர்ட்டல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இனி எளிதாக இணைய இணைப்பு பெற முடியும் . ஜியோவுக்குப் போட்டியாக ஏர்டெல் , வோடஃபோன் போன்ற தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள் இருந்தாலும் , அதற்கு இணையாக மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனமும் வாடிக்கையார்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகள் , பிளான்களை அறிமுகம் செய்து வருகிறது . 

அந்தவகையில் பி.எஸ்.என்.எல் நாட்டின் ஒவ்வொருவீடு , இடம் மற்றும் கிராமத்திற்கும் இணையத்தை வழங்குவதற்காக ஒரு புதிய போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது , இதன் மூலம் தற்போது நகரத்திலிருந்து பல மைல் தொலைவில் உள்ள உங்கள் கிராமத்தில் இணையத்தைப் பெறலாம் . பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் BookMyFiber என்ற பெயரில் போர்ட்டல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இந்த சேவை பயனர்களை அதன் பாரத் ஃபைபர் சேவைகளின் கீழ் புதிய இணைய இணைப்புகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது . இதில் உலக வரைபடம் காட்டப்படும் . அதில் நமது இருப்பிடத்தை ஜூம் செய்து குறிப்பிட்டாலே போதும் , பிஎஸ்என்எல் நெட்வொர்க்கின் ஃபைபர் இன்டர்நெட் கனெக்ஷன் வழங்கப்பட்டு விடும் . 

இது தொடர்பாக பிஎஸ்என்எல் உப உயரதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் , சில தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன . அதன்படி , வாடிக்கையாளர்கள் தங்களது இருப்பிடத்தைக் குறிப்பிடும்போது , அதன் அட்சரேகை , தீர்க்கரேகை பதிவாகிவிடும் . பின்பு , இந்தத் தகவல்கள் உள்ள FTTH அப்படியே FMS அமைப்பிற்கு தெரிவித்து , இணைய இணைப்புக்கான கோரிக்கை நிறைவேற்றப்படும் .

 வாடிக்கையாளர்கள் இதனை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பார்வையிடமுடியும் . பின்பு , அதில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பெயர் , முகவரி , பின்கோடு , மாநிலம் , இமெயில் முகவரி போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் . அதனைத் தொடர்ந்து ஃபைபர் கனெக்ஷன் திட்டங்கள் பட்டியலிடப்படும் . அதில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றத் திட்டங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம் .

 

பிஎஸ்என்எல் ஃபைபர் இணைப்பு கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டு , நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது . அதன்படி இணைய சேவை வழங்குநர் ரூ .449 முதல் ரூ .16,999 வரை திட்டங்களை வழங்குகிறது . இந்த திட்டங்கள் வரம்பற்ற தரவு பதிவிறக்கம் , உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு உள்ளிட்ட இலவச வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது .













கருத்துகள்