ஏளனமாக பேசிய ஆசிரியர்கள் .. பாஸ் போட வைத்த முதல்வர் ... ! - மாணவர் அடித்த போஸ்டர் வைரல் !
ஏளனமாக பேசிய ஆசிரியர்கள் .. பாஸ் போட வைத்த முதல்வர் ... ! - மாணவர் அடித்த போஸ்டர் வைரல் !
காட்சிகள் ஆண்டுதோறும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் நிலையில் மிகவும் பரபரப்பாக இருக்கும் . மாநில அளவில் , மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் , என்னுடைய வெற்றிக்கு காரணம் பள்ளி தலமை ஆசிரியர் முதல் செக்யூரிட்டி வரையில் கண்ணீருடன் அடுக்குவார் . கல்லூரியில் இந்த பிரிவு எடுத்து கலெக்டராகுவேன் .. பொறியாளராகுவேன் .. டாக்டராகுவேன் என்று சொல்லிவிட்டு , மக்களுக்கு சேவை செய்வேன் என்பதும் கட்டாயமாக இடம் பிடிக்கும் .
அச்சு மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் எங்கள் பள்ளி மாணவர் செய்த சாதனையை பாருங்க என்று சுயதம்பட்டம் அடிக்கும் . அதுமட்டுமின்றி 100 சதவீதம் தேர்ச்சி என்று விளம்பரம் செய்து , தனியார் பள்ளிகள் கல்லாக்கட்டும் . இது எல்லாம் வெற்றி களிப்பில் நடக்கும் விசயங்கள் . ஆனால் மறுபுறம் , குறைந்த மதிப்பெண் எடுத்தோ , தேர்வில் தோல்வியை தழுவியோ , இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்திகளும் அதிகமாக வரும் . ஆனால் இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது கொரோனா .
பள்ளி ரிசல்ட் அலப்பறை எதுவும் இல்லாமல் , அனைவரையும் பாஸ் மார்க் போட்டு மகிழ்ச்சிபடுத்த வைத்துள்ளது கொரோனா . நீ எல்லாம் உருப்பட மாட்ட .. முட்டை மார்க் தான் வாங்குவ .. நீ எல்லாம் எதுக்கு உயிரோட இருக்க என்று ஆசிரியைகளின் அர்ச்சனைகளை வாங்கும் மாணவர்கள் , இந்தாண்டு உண்மையிலே ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி என்கிற மூடில் உள்ளனர் .
இதில் நிஷாந்த் எனும் மாணவர் , ஒரு படி மேல சென்று , பாஸ் மார்க் போட்டு தேர்ச்சி பெற வைத்த முதல்வருக்கு போஸ்டர் ஒட்டி அசர வைத்துள்ளார் . அந்த போஸ்டரில் , பத்தாவதில் எனக்கு பாஸ் போட்டு வரலாற்று சாதனை படைத்த ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றி . என்னை பார்த்து ஏளனமாக சிரித்த ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியை சமர்பிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் . இந்த போஸ்டர் பேஸ்புக் , ட்விட்டர் என சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது . இந்த மாணவர் 244 மார்க் எடுத்து பார்டரில் பாஸ் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்
கருத்துரையிடுக