இடுகைகள்

இந்திய கொடியின் வரலாறு தெரியுமா ?

படம்
 இந்திய கொடியின் வரலாறு தெரியுமா ? 

ஜியோவின் ஆகஸ்ட் 15 ஆபர் ; 5 மாதம் இலவச நெட் கால்ஸ் + டேட்டா

படம்
  Add caption ஜியோவின் ஆகஸ்ட் 15 ஆபர் ; 5 மாதம் இலவச நெட் கால்ஸ் + டேட்டா    ரிலையன்ஸ் ஜியோ ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்திற்கான புதிய சலுகைகளைக் கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளது . இந்நிறுவனம் நான்கு ஆண்டுகள் என்கிற மிகக் குறுகிய காலத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனமாக மாறியுள்ளது .  அதன் மிக வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்று , அதன் சேவைகளைத் தொடங்கியபோது அறிமுகம் செய்யப்பட்ட ஜியோஃபை சாதனம் ஆகும் . ஆரம்பத்தில் இது சந்தைக்கு வந்தபோது , இந்த தயாரிப்புக்கு பெரும் தேவை இருந்தது . 4 ஜி ஸ்மார்ட்போன் இல்லையென்றாலும் கூட , மக்கள் எங்கு சென்றாலும் வேகமான 4 நெட்வொர்க்குடன் இணைக்கவும் , அதிவேக இணையத்தைப் பெறவும் இது கைகொடுத்தது .  இந்த சாதனம் மீது ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு அட்டகாசமான சலுகையை அறிவித்துள்ளது மற்றும் இதை 2020 ஆம் ஆண்டு சுதந்திர தினத்திற்கான சிறப்பு சலுகையாகவும் குறிப்பிட்டுள்ளது .  ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ள சுதந்திரதினசலுகை :                JioFi மீது அறிவிக்கப்பட்டுள்ள சுதந்திர தின சலுகையின் கீழ் ஒருவர் ஐந்து ...

நிறைய பணம் வந்துவிட்டது ... கைலாசாவுக்கு வாருங்கள் .. அழைக்கும் நித்தி

படம்
 நிறைய பணம் வந்துவிட்டது ... கைலாசாவுக்கு வாருங்கள் .. அழைக்கும் நித்தி  பல்வேறு குற்றவழக்கில் தேடப்பட்டு வருபவருமான பிரபல சாமியார் நித்தியானந்தா தற்போது தலைமறைவாக உள்ளார் . அவர் இதுவரை எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது .  இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கைலாசா என்னும் நாட்டை உருவாக்கி தன்னை அந்நாட்டின் பிரதமராக பிரகடனப்படுத்தி கொண்டார் . இதைத்தொடர்ந்து கைலாசா நாட்டுக்கென்று தனிபாஸ்போர்ட்டையும் வெளியிட்டார் . மேலும் கைலாசாவுக்கு குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்தார் .  இதைத்தொடர்ந்து சர்வரே குழம்பி நிற்கும் அளவிற்கு தாறுமாறாக பலர் பதிலளிக்க தொடங்கினர் . இந்நிலையில் கடந்த சில மாதங்களாக எந்த அறிவிப்பையும் வெளியிடமல் இருந்த நித்தியானாந்தியா . சமீபத்தில் புயலை கிளப்பும் அளவிற்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் .  அது என்னவென்றால் கிருஷ்ண ஜெயந்தியைமுன்னிட்டு தனது பக்தர்களுக்கு வாழ்த்து செய்தியோடு , கைலாசா பற்றிய முக்கிய அறிவிப்பும் ஆகும் . அதாவது தான் உருவாக்கிய கைலாசா நாட்டிற்கு தேவையான கரன்சியை அச்சடித்து விட்டதாகவும் , அதற்கென தனி வங்க...

ரூ .10,000 க்கு 5000mAh பேட்டரி + ட்ரிபிள் ரியர் கேமரா - வேற என்ன வேணும் ?

படம்
  ரூ .10,000 க்கு 5000mAh பேட்டரி + ட்ரிபிள் ரியர் கேமரா - வேற என்ன வேணும் ?   இன்பினிக்ஸ் தனது புதிய ஸ்மார்ட்போன் ஆன இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 மாடலை உலகளாவிய வலைத்தளத்தில் பட்டியலிட்டுள்ளது . என்ன விலை ... என்னென்ன அம்சங்கள் ... இதோ முழு விவரங்கள் ...  இன்பினிக்ஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 மாடல் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .இந்த ஸ்மார்ட்போன் ஒப்பீட்டளவில் மெலிதான பெஸல்கள் மற்றும் அடர்த்தியான கன்னம் கொண்ட ஒரு பெரிய டிஸ்பிளேவுடன் வருகிறது . செல்பீ கேமராவிற்காக முன்பக்கத்தில் ஒரு சிறிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது . இந்த ஸ்மார்ட்போன் நான்கு நாள் பேட்டரி ஆயுளை வழங்கும் திறனை கொண்டு இருப்பதாக இன்பினிக்ஸ் கூறுகிறது . இதன் க்ளோபல் வேரியண்ட் ஆனது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை பின்புறத்தில் பேக் செய்கிறது , மேலும் இது ஒரு செவ்வக தொகுதிக்குள் ஃபிளாஷ் உடன் வைக்கப்படுகிறது .  இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 உலகளாவிய இணையதளத்தில்சிங்கிள் ரேம் மற்றும் சேமிப்பக உள்ளமைவுடன் பட்டியலிடப்பட்டுள்ளது . இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 மாடலின் விலை மற்றும் விற்பனை : இன்பினி...

இணையதளத்தில் வைபவ் - வின் ‘ லாக்கப் ' இன்று வெளியாகிறது

படம்
  இணையதளத்தில் வைபவ் - வின் ‘ லாக்கப் '      இன்று  வெளியாகிறது                  கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் 4 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கின்றன . இதனால் படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக இணையதளத்தில் வெளியிட தொடங்கி உள்ளனர் . ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் , கீர்த்தி சுரேசின் பெண்குயின் , வரலட்சுமி நடித்துள்ள டேனி ஆகிய படங்கள் ஓ.டி.டி தளத்தில் வந்தன .  இந்தநிலையில் வைபவ் , வெங்கட்பிரபு , வாணிபோஜன் , பூர்ணா ஆகியோர் நடித்துள்ள லாக்கப் படமும் இன்று ( 14 ஆம் தேதி ) இணையதளத்தில் வெளியாகிறது . இந்த படத்தைநடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார் . எம்.ஜி.சார்லஸ் இயக்கி உள்ளார் . இது குறித்து வைபவ் கூறும்போது , துப்பறியும் திகில் கதையம்சம் உள்ள படம் லாக்கப் கதையும் கிளைமாக்சும் வித்தியாசமாகவும் எதிர்பாராத திருப்பங்களுடனும் இருக்கும் . நானும் வெங்கட் பிரபுவும் போலீஸ் அதி காரிகளாக வருகிறோம் . திரைக்கதை விறுவிறுப்பாக நகரும் . தியேட்டர்கள் திறக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் . அதோடு ரிலீசுக்குபல பெரிய பட்ஜெட் படங்கள் வரிசைய...

இந்தக் கல்லூரியில் சேர வெறும் ஒரு ரூபாய் தான் கட்டணம் ... எவ்வளவு நல்ல மனசு பாருங்க !

படம்
 இந்தக் கல்லூரியில் சேர வெறும் ஒரு ரூபாய் தான் கட்டணம் ... எவ்வளவு நல்ல மனசு பாருங்க !               மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கல்லூரி ஒன்று , மாணவர் சேர்க்கைக்கு ஒரு ரூபாய் கட்டணமாக நிர்ணயித்து அசத்தியுள்ளது . கொரோனா வைரஸை காரணம்காட்டி மத்திய மற்றும் மாநில அரசுகள் போட்டுள்ள ஊரடங்கு உத்தரவு சட்டத்தால் , பலரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர் . இந்த நிலையில் , மேற்கு வங்காள மாநிலம் நைஹாட்டியில் உள்ள ரிஷி பங்கிம் சந்திரா கல்லூரி , மாணவர் சேர்க்கைக்கு ஒரு ரூபாய் கட்டணமாக நிர்ணயித்துள்ளது .  வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லூரியில் அனைத்துப் பாடப்பிரிவுகளை சேர்த்து மொத்தம் 2,400 இடங்கள் உள்ளன . இதுதொடர்பாக , அக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் சஞ்சிப் சஹா கூறியுள்ளதாவது : " ஆன்லைன் படிவங்களுக்கான கட்டணம் வழக்கம்போல் ரூ .60 ஆக இருக்கும் . இருப்பினும் , அனைத்து பட்டப் படிப்புக்களுக்கான சேர்க்கைக் கட்டணம் ஒரு ரூபாயாக இருக்கும் .  மாணவர்களுக்கான ஒரே நுழைவு கட்டணமாக , ஒரு ரூபாயை நிர்ணயிக்க கல்லூரி நிர்வாக கு...

ஏளனமாக பேசிய ஆசிரியர்கள் .. பாஸ் போட வைத்த முதல்வர் ... ! - மாணவர் அடித்த போஸ்டர் வைரல் !

படம்
  ஏளனமாக பேசிய ஆசிரியர்கள் .. பாஸ் போட வைத்த முதல்வர் ... ! - மாணவர் அடித்த போஸ்டர் வைரல் !   காட்சிகள் ஆண்டுதோறும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் நிலையில் மிகவும் பரபரப்பாக இருக்கும் . மாநில அளவில் , மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் , என்னுடைய வெற்றிக்கு காரணம் பள்ளி தலமை ஆசிரியர் முதல் செக்யூரிட்டி வரையில் கண்ணீருடன் அடுக்குவார் . கல்லூரியில் இந்த பிரிவு எடுத்து கலெக்டராகுவேன் .. பொறியாளராகுவேன் .. டாக்டராகுவேன் என்று சொல்லிவிட்டு , மக்களுக்கு சேவை செய்வேன் என்பதும் கட்டாயமாக இடம் பிடிக்கும் . அச்சு மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் எங்கள் பள்ளி மாணவர் செய்த சாதனையை பாருங்க என்று சுயதம்பட்டம் அடிக்கும் . அதுமட்டுமின்றி 100 சதவீதம் தேர்ச்சி என்று விளம்பரம் செய்து , தனியார் பள்ளிகள் கல்லாக்கட்டும் . இது எல்லாம் வெற்றி களிப்பில் நடக்கும் விசயங்கள் . ஆனால் மறுபுறம் , குறைந்த மதிப்பெண் எடுத்தோ , தேர்வில் தோல்வியை தழுவியோ , இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்திகளும் அதிகமாக வரும் . ஆனால் இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது ...